குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்?

Loading

  1. ஒரு செக்குலர் நாட்டில் வாழ்ந்துகொண்டு
  2. ‘விமர்சன சிந்தனை’ எனும் பெயரில் இறைநம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கும் செக்குலர் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த செக்குலர் பாடத்திட்டத்தைப் போதிக்கும் பள்ளிகளில் படித்துக்கொண்டு
  3. இறைவனையோ மதத்தையோ ஏற்காத செக்குலர் மேலாதிக்கப் பண்பாட்டின் மத்தியில் நின்றுகொண்டு
  4. ஒவ்வொரு நாளும் இறைவனின் இருப்பை அலட்சியப்படுத்தும் அல்லது சந்தேகிக்கும் ஊடகம், திரைப்படங்கள், இசை போன்றவற்றை நுகர்ந்துகொண்டு
  5. மதப்பற்றோடு இருப்பது அறிவீனம் என்றும், மதத்தைச் சந்தேகிப்பது அறிவொளி என்றும் கருதப்படும் ஓர் அறிவுச் சூழலில் இருந்துகொண்டு

இத்தனைக்கும் பிறகு, ஏதோ தடைகள் எல்லாவற்றையும் மீறி இந்நூற்றாண்டின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டது போல் “யுரேகா…. இறைவன் என்றொருவன் இல்லை!” எனப் பிரகடனம் செய்யும் ஒரு நாத்திகர் உண்மையான சுதந்திரச் சிந்தனையாளரா? அல்லது,

  1. ஒரு செக்குலர் நாட்டில் வாழ்ந்துகொண்டு
  2. ‘விமர்சன சிந்தனை’ எனும் பெயரில் இறைநம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கும் செக்குலர் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த செக்குலர் பாடத்திட்டத்தைப் போதிக்கும் பள்ளிகளில் படித்துக்கொண்டு
  3. இஸ்லாத்தை ஒரு பிற்போக்கான, தீவிரவாத மதமாகக் கருதும் செக்குலர் மேலாதிக்கப் பண்பாட்டின் மத்தியில் நின்றுகொண்டு
  4. ஒவ்வொரு நாளும் இறைவனின் இருப்பை அலட்சியப்படுத்துவது அல்லது சந்தேகிப்பது மட்டுமின்றி, குறிப்பாக இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஊடகம், திரைப்படங்கள், இசை போன்றவற்றை நுகர்ந்துகொண்டு
  5. மதப்பற்றோடு இருப்பது அறிவீனம் என்றும், மதத்தைச் சந்தேகிப்பது அறிவொளி என்றும் கருதப்படுவதோடு; முஸ்லிமாக இருப்பதே ஒரு மத்தியகாலக் காட்டுமிராண்டித்தனம் என்பதாகவும் —குறைந்தபட்சம் மூடத்தனம் என்பதாகவும்— கருதப்படும் ஓர் அறிவுச் சூழலில் இருந்துகொண்டு

இத்தனைக்குப் பிறகும், மூழ்கடிக்கத் துடிக்கும் அனைத்து அழுத்தங்களையும் மீறி, கனன்று கொண்டிருக்கும் நெருப்புக் கங்கை கைகளில் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் தன்னுடைய இஸ்லாமிய நம்பிக்கைகளின் மீதான பற்றையும் உறுதிப்பாட்டையும் தடுமாற்றம் ஏதுமின்றி தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஒரு இறைநம்பிக்கையாளர் உண்மையான சுதந்திரச் சிந்தனையாளரா?

உண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்?

(தமிழில்: ஷான் நவாஸ்)

மூலம்: Who Is the Real “Freethinker”?

Related posts

Leave a Comment