சந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்
இன்று சமூக வெளிகளில் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரச்னை சந்தையூர்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் பேசப்பட்ட உத்தபுரம் மாதிரி இது நாடு முழுக்கக் கொண்டு போகப்படவில்லை. பிரகாஷ் காரத்தும் இங்கு வரவில்லை. எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடுவதில் ஒரு தயக்கம். ஏனெனில் இங்கே தீண்டாமைச் சுவரை எழுப்பியவர்களாகக் குற்றம் சாட்டப் படுகிறவர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களும் தமிழகமெங்கும் தீண்டாமைக்கு உட்படுத்தபடும் ஒரு சாதியினரே. ஆம்,பிரச்னை இங்கே இரண்டு பட்டியல் சாதியினர்களுக்கு இடையில். தீண்டாமைச் சுவரை எழுப்பித் தாங்கள் தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள் அருந்ததியர். இல்லை இல்லை அது தீண்டாமைச் சுவரே இல்லை என மறுப்பவர்கள் இன்னொரு தலித் சாதியினரான பறையர்கள். இதனால்தான் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயக்கம். வழக்கமாக இம்மாதிரிப் பிரச்னைகளில் தலையிடக் கூடியவர்கள் வாய் மூடி மௌனம் காக்க வேண்டிய சூழல். இரு சாராருமே ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதற்காக ஆகக் கீழாக ஒடுக்கப்படும் ஒரு சாதியினர் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசாதிருப்பது என்ன நியாயம் என்கிற ஒரு தார்மீகக் கேள்வியும் இங்கே எழுகிறது. இந்நிலையில்தான் சந்தையூரில் என்னதான் நடக்கிறது எனப் பார்த்து வரலாம் எனச் சென்ற வாரம் அங்கு சென்றிருந்தேன்.
மேலும் படிக்க