நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உலகத் தொழிலாளர்களே, ஓய்வெடுங்கள்!

Loading

அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் – ஜெர்மன் தத்துவவியலாளர் ப்யுங் சுல் ஹான். உருவில்லா அருவப் பொருட்களையே நேசிக்கவும் பகிரவும் செய்கிறோம், அவையே நம்மை ஆள்கின்றன. யதார்த்த உலகிற்கும் எண்ம உலகிற்குமான (digital world) வேறுபாடுகள் குறையும்போது நம்முடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார் ஹான். உலகளவில் அதிகம் வாசிக்கப்படும் தத்துவவியலாளரான ஹான், நவதாராளவாத முதலாளித்துவத்தின் விளைவுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் கதாநாயகியைக் கொண்ட மிஸ் மார்வல் தொடர் எப்படியிருக்கிறது?

Loading

அமெரிக்க முஸ்லிம்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அடையாளச் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைத் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் கரிசனத்தோடு சித்தரிக்க முயன்றுள்ளது மிஸ் மார்வல் தொடர். நியூயார்க் நகரத்தில் இருக்கும் பள்ளிவாசலையும், அதனுள்ளே இயங்கும் ஒரு பண்பாட்டு வெளியையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. அதேபோல், பல்வேறு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகைகளையும், வீட்டு விஷேசங்களையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதைக் காட்டுவது நெகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. உதாரணமாக, கமலா கானின் அண்ணன் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்வார். அவரும், இஸ்லாமியர் அல்லாத கமலாவின் மற்ற நண்பர்களும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் பண்பாட்டு உலகிற்குள் நுழைந்து, ஈத், திருமணம் முதலான அவர்களின் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு கலந்துகொள்ளும் காட்சி அத்தனை இனிமையாக இருந்தது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

கர்நாடகா: PFI, SDPI-க்குத் தடை கோரியதா காங்கிரஸ்?

Loading

முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி, மசாலா தூவித் தந்துகொண்டிருக்கின்றன செய்தி ஊடகங்கள். பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி குளிர்காய்வதே அவற்றின் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் டிஜிட்டல் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. முஸ்லிம் சமூகத்துக்கு அந்தச் செய்தியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியெல்லாம் அவை பொருட்படுத்துவதே இல்லை.

அல்காயிதா இயக்கத் தலைவர் ஹிஜாப் தடை பற்றி பேசியிருப்பதாக வந்துள்ள செய்தியை தற்போது எல்லா ஊடகங்களும் மிதமிஞ்சி கவனப்படுத்தி வருகின்றன. அதைப் பல கோணங்களில் போஸ்ட் மார்ட்டமும் செய்துகொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க
காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

உத்தரப் பிரதேச தேர்தல்: தமிழகப் பத்திரிகையாளர்களின் கள அனுபவப் பகிர்வு

Loading

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் இனியன், பியர்சன் ஆகியோர் தம் அனுபவங்களை மெய்ப்பொருள் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்துள்ளார்கள்.

* உ.பி. தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு கட்சியும் எப்படி முன்னெடுத்தது?
* எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் என்னென்ன?
* ஆதித்யநாத் அரசின் தோல்வி ஏன் தேர்தலில் எதிரொலிக்கவில்லை?
* பாஜகவின் சாதி அரசியல் பற்றி..
* உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?

– உள்ளிட்ட பல விஷயங்களைத் தங்களின் ஒன்றரை மாத கள அனுபவங்களின் வழியாக அலசியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க
media one c dawood கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

“பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸை விமர்சித்ததற்காக ‘மீடியா ஒன்’ இலக்காக்கப்பட்டிருக்கிறது” – நிர்வாக ஆசிரியர் சி.தாவூத்

Loading

“எங்களது ஆசிரியர் குழுவின் கொள்கை முடிவுகள் ஒன்றிய அரசின் கொள்கைகளை, சிஏஏ – என்ஆர்சி விவகாரங்களில் உட்பட, விமர்சிப்பதாக அமைகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸின் வகுப்புவாத அரசியலையும் விமர்சித்து வருகிறோம்” என்று சொல்லும் தாவூத், இவ்வாறு இருந்தபோதிலும் செய்தி சேகரிப்பதில் புறவயமான அணுகுமுறையைத் தாங்கள் மேற்கொள்வதாக குறிப்பிடுகிறார்.

“அரசின் கொள்கைகள் மீதான எங்கள் விமர்சனத்தில் புறவயமான அணுகுமுறையையும் உண்மையையும் கடைப்பிடிக்கிறோம். விமர்சனபூர்வமாக இருப்பதுதானே ஊடகத்தின் பணி” என்று தெரிவிக்கும் அவர், 2020, 2021ல் டெல்லியின் எல்லைப்புறங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்தபோது, களத்திலிருந்து மீடியா ஒன் பல்வேறு கோணங்களையும், காட்சிகளையும் ஒளிபரப்பியதாகச் சொல்கிறார்.

மேலும், மீடியா ஒன் ஒளிபரப்பை நிறுத்த தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு கேரளாவின் ஊடகப் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

1980 மொராதாபாத் பெருநாள் படுகொலை: நினைவேந்தல்

Loading

இந்தப் படுகொலையையும், ஊடகங்களில் இடதுசாரிகளால் அப்பட்டமாக இதற்கு வகுப்புவாதச் சாயம் பூசப்பட்டதையும் நாம் மறந்துவிட்டோம் எனும் உண்மை ஒருபுறமிருக்க, இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். பொதுவாக சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டியது, காங்கிரஸும் அதன் இடதுசாரிக் கூட்டாளிகளும் மதச்சார்பற்றோராக இல்லை (அவர்கள் அவ்வாறு வாதிட்டபோதிலும்) என்பதைத்தான். ஒருபோதும் அவர்கள் அப்படி இருந்ததும் இல்லை. பாஜகவின் பக்கம் மட்டும் கவனம் செலுத்துவது மதச்சார்பற்ற கட்சிகள் எனச் சொல்லப்படுவனவற்றின் குற்றங்களை நமக்கு மறக்கடிப்பதோடு, அது காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்குமே அனுகூலமளிக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன?

Loading

1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.
3.அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.

இந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?

இந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது?

இதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார்? எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்?

மேலும் படிக்க