Topic: இலக்கியம்
பூனைகளில்லா உலகம் – வாசிப்பனுபவம்
பூனைகளில்லா உலகம் நாவல் எதார்த்தமும், மாயவுலகும் ஒன்றுகலந்தது. அதில் சாத்தான் ஒன்று தோன்றி உரையாடும்; பூனை ஒருசமயம் பேசும். ஊடுபாவான தத்துவ குணம் கொண்டது நாவலின் தொனி. மரணம்; மனிதக் கண்டுபிடிப்புகள்; வாழ்க்கையின் பொருள் ஆகியவை இதில் தத்துவ வினவுப் பொருட்களாக உள்ளன. அதன் மீது விசாரணையானது நிகழ்த்தப்படுகிறது. அதன் விளைபொருளாக — வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிந்துகொண்ட எண்ணம் நமக்குத் தோன்றும்போது நாவல் நிறைவடைகிறது.
மேலும் படிக்க‘கவிதையின் சமன்’ – மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023
ஒவ்வொரு சமூகத்தினரும் சாதி, மத அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தங்கள் சமூக மாணவர்களுக்கு போதிய இடங்கிடைக்கிறது என்ற பருண்மை இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுவது வேதனையளிக்கும் விசயம்தான். மலபார் இலக்கியத் திருவிழாவுமே நீண்ட ஒதுக்கலினால், சமூகம் தனக்குத்தானே கண்டெடுத்த விடைதானே. ‘எங்கள் இலக்கிய முதுசொங்களை இறக்கி வைப்பதற்கும், புதியதாய் சுட்ட பணியாரங்களைக் கடை விரிப்பதற்கும் ஈரடி இடந்தாருங்கள் எஜமானே!’ என்ற மன்றாட்டுகளிலிருந்து விடுதலை. இது நம்ம இடம் என்ற உணர்வு அளிக்கும் விசாலமும் தன்னுணர்வும் மகத்தானது.
மேலும் படிக்கஇந்துமாக்கடல் வாழ் சமூகத்தில் மறைந்துவரும் மொழியைக் காப்பாற்றும் காயல்பட்டினம்
தமிழ் – அறபி ஆகிய இரண்டு செவ்வியல் மொழிகள் இணைந்து ஈன்ற அழகிய குழந்தைதான் அர்வி மொழி. இன்று அர்வி அதன் நோக்கத்தையும் பெருமையையும் இழந்திருந்தாலும், அது மீட்டுருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது அவசியம்.
மேலும் படிக்கஇன்னும் எயிதுக!
தனித்தமிழ் அல்லது தூய தமிழ் என்பது சொற்பொழிவுக்கு அழகு. வட்டார வழக்கிலும் மேடையுரை ஆற்றுவதில் தப்பில்லை. ஆனால், மேடைகளில் செந்தமிழுக்கு உள்ள மதிப்பு ஒருநாளும் வட்டார வழக்குக்கு வாய்க்காது, இயல்பாகவே இது மக்களின் பொது மனத்தில் உணரப்படுகிறது. அதேபோல், தமிழறிஞர் எவரும் தம் அன்றாடப் புழக்கத்தில் செந்தமிழ் செப்புவதில்லை. செப்பினால் வீட்டிலேயே எடுபடாது.
மேலும் படிக்கஅறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு
அறபு மலையாள இலக்கியத்தின் அடித்தளம் அறபுத் தமிழ் இலக்கியத்திலிருந்து எழுந்துள்ளதால் அதன் ஆய்வுகளை அறபுத் தமிழ் வரலாற்றிலிருந்து தொடங்க வேண்டும் என்பது அறபு மலையாள ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான வழிவகைகளை அறபுத் தமிழ் ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு’ என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
மேலும் படிக்கஎஸ்.எல்.எம். ஹனீபா – ஒரு முன்னோடியின் வழித்தடம்
எஸ்.எல்.எம் தன்னுடைய வாழ்க்கையை தேர்வுசெய்ததும், அதை ஒழுங்கமைத்துத் தொடர்ந்ததும் சவால்கள் நிறைந்த ஒன்று. இந்தச் சவால்களின் வழியான பயணத்தின் அனுபவங்களே அவரை பலப்படுத்தின. அவரை வீரராக்கின. இடையில் வந்த அத்தனை நெருக்கடிப் புயல்களிலும் அவர் வீழ்ந்துவிடாது நிமிர்ந்து நிற்கும் பெரியதொரு ஆல்.
மேலும் படிக்க