சலஃபிகள் தங்களை முன்னோர்களின் நீட்சியாகக் கருதுகின்றனர். ‘சலஃப்’ என்ற சொல்லின் பொருளும் அதுதான். சலஃப் என்றால் முன்சென்ற தலைமுறை, நமக்கு முன் வாழ்ந்த தலைமுறை என்று பொருள் ஆகும். இதன் மூலம் அவர்கள் தங்களை முன் சென்ற தலைமுறையினரை — குறிப்பாக இறைத்தூதரின் (ஸல்) மரணத்தைத் தொடர்ந்து வாழ்ந்த தலைமுறையினரை — பின்பற்றுபவர்கள் எனக் கூறுகின்றனர். அவர்களின் கருத்துப்படி அதுதான் மிகச்சிறந்த முஸ்லிம் தலைமுறை ஆகும்.
முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய கோட்பாட்டளவிலான வித்தியாசங்களைப் பார்க்கையில், அவையனைத்தும் முஸ்லிம்களின் சாராம்சத்தோடு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற கேள்விகளோடு தொடர்புடையவை அல்ல என்று பார்க்கிறோம். மாறாக, அவை ‘இஸ்லாத்தில் போதுமானளவு விவரிக்கப்படாத விவகாரங்கள்’ என்று சிலர் நினைத்த விஷயங்களை விவரிக்க முற்படுவதோடு தொடர்புடையது என்று பார்க்க முடிகிறது.
இமாம் அல்ஆஸீயின் இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள்பற்றிய தொடர் உரையின் இப்பகுதி, இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதலாவது கடுபோக்காளர்களாக அறியப்படுகிற ஃகவாரிஜ்களின் சிந்தனைப் போக்கு, அதன் சிக்கல், அவர்களுக்குள்ளே காணப்பட்ட வேறுபட்ட குழுக்கள்குறித்த முழுமையான சித்திரத்தை வழங்குவதுடன் சம காலத்தில் அப்போக்குகளின் நீட்சியையும் சுட்டிக் காட்டுகிறது. நடுநிலையுடன் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இது பயனளிக்கக் கூடும்.
ஹமீது அல்கரின் இந்தப் புத்தகம் வஹ்ஹாபியத்தின் தந்தையான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் பூகோளப் பின்னணி, அறிவுத் தகைமை போன்ற அடிப்படையான அம்சங்கள் தொட்டு பலவற்றை விவாதிக்கின்றது. சுன்னீ இஸ்லாமிய மரபிலிருந்து வஹ்ஹாபியம் எவ்வாறு விலகி நிற்கிறது, நவீன கால வரலாற்றில் தோன்றிய பிற சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அது வேறுபடும் புள்ளிகள் என்னென்ன, பிறவற்றோடு வஹ்ஹாபிய இயக்கத்தை ஒப்பிடுவது ஏன் தவறு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது. குறிப்பாக சஊதி அறபியாவின் உருவாக்கத்தில் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு, அது ஏகாதிபத்திய சக்திகளுடன் கொண்ட உறவு, பண்பாட்டு வெளியில் அதன் பாதிப்புகள், முஸ்லிம்களிடையே அது கூர்தீட்டியிருக்கும் குறுங்குழுவாதம் ஆகியவையும் இப்புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன.
வஹ்ஹாபியத்தின் வேர் முதல் நுனி வரை அலசும் இந்நூலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு விரிவாக ஆராய முடியும். அந்த அளவுக்குச் செறிவான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது இவ்வாக்கம். தாங்கள் மட்டுமே ஓரிறைவாதத்தை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் என்றும், தாங்களே நூதன வழக்கங்களைத் தவிர்த்து தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் ஏகபோக உரிமை கோரும் வஹ்ஹாபிகளின் அடித்தளத்தை இப்புத்தகம் கேள்விக்குட்படுத்துகிறது.
சாத்வீகமான, அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் கோமாளிகளாக, கோழைகளாக சித்தரிக்கப்பட்டலாம். ஆனால் பிற்பாடு அவர்கள்தாம் நிலைத்திருப்பார்கள். அறிவுப்பூர்வமான எதுவும் நீண்ட தர்க்கத்திற்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். உணர்ச்சிகளைத் தூண்டுபவர்கள் உடனடி விளைச்சல்களை அறுவடை செய்யலாம். ஆனால் அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.
ஈமான் மென்மையை, பொறுமையை, சகிப்புத்தன்மையை ஏற்படுத்தும். அது உள்ளங்களை வென்றெடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளையே பின்பற்றும். அது ஒருபோதும் வெறுப்பூட்டும் பிரச்சாரத்திடம் அடைக்கலம் கோராது. நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் தங்களின் தனிப்பட்ட காழ்ப்புகளை, வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவிட மாட்டார்கள்.
பிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.
சவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.
வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன? வஹ்ஹாபியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? வஹ்ஹாபிய சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன? தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படி மதிப்பிடுகிறது? வஹ்ஹாபியமும் சலஃபிசமும் ஒன்றா? அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை? மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹ்ஹாபியத்தை எவ்வாறு பார்த்தார்கள்? வஹ்ஹாபியத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார்? ‘தொழில்முறை வஹ்ஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன? என்பவை போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி இரத்தின சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.
ஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்பினை ஏற்படுத்த முனைகிறார்கள்.