கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவன் அருளிய ஹிஜாப் சட்டம் – யாசிர் காழி

Loading

மறைக்க வேண்டிய உடல் பாகங்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இஸ்லாம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. இருபாலருக்கும் வெவ்வேறு உடை ஒழுங்குகள் தனித்தனியே வரையறுக்கப்படும் அதேவேளை, ஆடையை இறுக்கமாக அன்றி தளர்வுடன் அணிதல், அங்கங்கள் வெளியே தெரியும் விதத்தில் ஆடை அணியாதிருத்தல் முதலானவை இருபாலாருக்குமான பொது ஒழுங்குகளாய் வலியுறுக்கப்படுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் பாரம்பரியத்தில் செஸ் விளையாட்டு

Loading

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாரசீகத்தை ஆளத் தொடங்கிய பிறகே மேற்காசியாவில் இந்த விளையாட்டு வேகவேகமாகப் பரவ ஆரம்பித்தது. அரபு மக்களுள் பெரும் பகுதியினர் இதை விளையாடலாயினர். செஸ் விளையாட்டு அப்போது ‘ஷத்ரஞ்’ என்று அழைக்கப்பட்டது.

அறபு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாரசீகத்தை வசப்படுத்தியது செஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாய் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்த விளையாட்டையும் கொண்டு சேர்த்தனர். இவர்கள் ஆளும் பகுதிகளுக்கு வரும் பயணிகளும் இதை அவரவர் பிரதேசங்களுக்குக் கொண்டு போயினர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அழிவின் விளிம்பில் அடையாளச் சின்னங்கள்

Loading

தமிழக முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்கது. எனினும், தமிழக வரலாற்றுப் பக்கங்களில் இவர்களுக்குரிய இடம் இல்லை. தங்களின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் இவர்கள் பின்தங்கியுள்ளனர். இச்சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளச் சின்னங்கள் பலவும் அழிந்துவிட்டன. அறியாமையாலும் அலட்சியத்தாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க அறிஞர்களும் வரலாற்று ஆர்வலர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். காலம் தாழ்த்தினால் எதுவும் மிஞ்சாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

தத்துவமும் விஞ்ஞானமும் – ஜமாலுத்தீன் ஆஃப்கானி

Loading

மனிதன் பெற்ற முதற் கல்வி மதக் கல்வியாகும். ஏனெனில், விஞ்ஞான அறிவினை ஈட்டி, ஆதாரங்களையும் விளக்கங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சமூகமே தத்துவார்த்த அறிவினைப் பெற்றிருக்க முடியும். எனவே, எமது மதத் தலைவர்கள் முதலில் தம்மைத் தாம் சீர்திருத்தி, தமது விஞ்ஞானத்தினதும் அறிவுத் துறையினதும் பயன்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யாத வரையில் முஸ்லிம்கள் ஒருபோதும் சீர்திருந்தப் போவதில்லை என நாம் உறுதியாகக் கூற முடியும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய நாள்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம்

Loading

நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாள்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாள்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?

மேலும் படிக்க