கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சின்வாரின் கைத்தடி!

Loading

“உயிர்த் தியாகிகள் சிந்திய ரத்தத்திற்கு உண்மையாளர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக பாதை அமைத்த அவர்களின் தியாகங்களை அரசியல் லாபங்களுக்காக வீணாக்கிவிடாதீர்கள். நமது முன்னோர்கள் தொடங்கியதை முடிப்பது நமது வேலை. விலை எவ்வளவு இருந்தாலும் இந்தப் பாதையை விட்டும் தவறிவிடாதீர்கள். இந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இப்போதும் எப்போதும் உறுதியின் உறைவிடமாக காஸா இருக்கும்.” – யஹ்யா சின்வார்

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

Loading

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.

இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன்-இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தம்: விளைவுகள் என்ன?

Loading

இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆணவத்திலிருந்து அவமானம் வரை: இஸ்ரேலை உலுக்கிய அந்த பத்து மணிநேரம்

Loading

இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் அதன் உளவு மற்றும் இராணுவத் துறைகளின் தோல்விக்கும் அப்பாற்பட்டது; இஸ்ரேலுக்கு இதுவோர் அரசியல், உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் படுமோசமான இயலாமையையும் காட்டியுள்ளது. ஃபலஸ்தீனை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, மத்தியக் கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கும் இது பேரிடியாய் அமைந்துள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

Loading

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க