கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்: சட்ட வல்லுநர்கள் சொல்வதென்ன?

Loading

சட்டப்படி ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டால் அவரை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒருவர் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்ட பிறகு அவர் என்ன குற்றம் செய்தார் என்பதைப் பார்க்க வேண்டிய தேவையில்லை. தண்டனைக் காலம் முடியும் முன்னரேகூட ஒருவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அரசியலமைப்பின் 161வது விதியின் கீழ் அதிகாரம் உள்ளது. ஒரு சிறைவாசியின் நடத்தைக்கான நற்சான்று இருப்பதே விடுதலை செய்வதற்கு போதுமானது. இவ்வாறு விதிகள் தெளிவாக இருந்தாலும் சிறைவாசிகள் விடுதலை என்பது பாரபட்சமாக, தன்னிச்சையாகத்தான் இதுவரை கையாளப்பட்டு வந்திருக்கிறது என்கிறார் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறைச்சாலைகளில் மட்டும் இந்திய முஸ்லிம்களுக்குக் கூடுதல் ‘பிரதிநிதித்துவமா’?!

Loading

முஸ்லிம் மக்கள் தொகையைவிடவும் சிறைச்சாலைகளில் அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் தம் மக்கள் தொகை வீதத்தைவிடவும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.

அஸ்ஸாம், கேரளா, பிஹார் (ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும்) ஆகிய மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம் சிறைவாசிகளின் வீதமும் மொத்த முஸ்லிம் மக்கள் தொகை வீதமும் பொருந்திப்போகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்?

Loading

தமிழகத்தின் மத்தியச் சிறைகளில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது – ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக – முஸ்லிம்களே! இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது.

மேலும் படிக்க