இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதற்கான அவசியம்
இஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.
மேலும் படிக்க