மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள் – வில்லவன்
இந்த நடுத்தர வர்க்கம்தான் இதுவரை நடந்த தாராளமய சுரண்டலுக்கு விளம்பர தூதுவர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் இதுவரை நடந்த சூழல் சீர்கேடுகளுக்கும், கிராமப் பொருளாதார வீழ்ச்சிக்கும் மவுன சாட்சிகளாக இருந்தார்கள். வறிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களான மானிய வெட்டு, இலவச கல்வி மருத்துவ வசதிகள் ஒழிப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் ஒழிப்பு போன்றவைகளுக்கு இவர்களே போர்வீரர்களாக இருந்தார்கள். ஆனால் இனி இந்த வீரர்களுக்கான தேவை இல்லை, அவர்களுக்கு வீசப்படும் எலும்புத்துண்டுகள் இனி கார்ப்பரேட்டுக்களுக்கு அனாவசியம்.
மேலும் படிக்க