babri masjid, gyanvapi masjid காணொளிகள் குறும்பதிவுகள் 

அன்று பாபர் மசூதி, இன்று ஞானவாபி மசூதி, நாளை..?

Loading

இன்று உத்தரப் பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் ஞானவாபி மசூதியைக் கட்டினார் என்று சொல்லி, அதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக்கு எதிரான ஞானவாபி பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனுதான் நாளை விசாரணைக்கு வருகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான 450 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 அன்று இந்துத்துவ பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. சரியாக 27 ஆண்டுகள் கழித்து, 2019 நவம்பர் 9ஆம் தேதி மசூதியைத் தகர்த்த அந்த இந்துத்துவ வன்முறை கும்பலிடமே மசூதி அமைந்திருந்த நிலம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் பாஜக அரசை அறக்கட்டளை அமைத்து கோவில் கட்டிக்கொள்ளுங்கள் என்று ஒரு அநீதியான தீர்ப்பை வழங்கியது. 5 ஏக்கரில் முஸ்லிம்களுக்கு வேறொரு நிலம் ஒதுக்கப்பட்டது. கொடுமை…

மேலும் படிக்க
gyanvapi mosque tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஞான்வாபி மஸ்ஜித் – கிணற்றுக்குள் பூதம்!

Loading

பாபர் மசூதியுடன் எதுவும் முடிந்துவிடவில்லை. நிஜத்தில் பாபர் மசூதி பலவித வரிசை மாற்றங்களுக்கும், பெருக்கல் சாத்தியங்களுக்கும் அரசியல் இந்துத்துவத்தை இட்டுச் சென்றிருக்கிறது. இப்போது சந்திக்கு இழுத்து விடப்பட்டுள்ள ஞான்வாபி மசூதி – வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்கு அருகமையில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும். காசி விசுவநாதர் ஆலயத்தின் நிர்வாகத்தை அரசு 1983 முதல் தன்வசம் எடுத்துக்கொண்டு நடத்தி வருகிறது. அதற்கு முன்பாக இருந்த மடாதிபதிகளில் ஒருவரான சுவாமி ராஜேந்திரா என்பவர் இந்த விவகாரம் பற்றிப் பேசும்போது, (இன்கே பாஸ் ராம் நஹீ ரஹங்கே.. யே பெரோஜ்கார் ஹோ ஜாயேங்கே) ‘இவர்களுக்கு (இந்துத்துவர்கள்) ராம் இல்லாது போனால், வேலை வெட்டி இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்’ என்றார். மேலும் விவரமாகப் பேசுகையில், “இப்போது புதியதொரு வேலையைத் துவக்க ஒரு தளம் (ராமர் கோவில் மூலம்) அவர்களுக்குக் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிமியைக் குற்றப்படுத்தாதீர்கள்! – பேரா. இர்ஃபான் அஹ்மது

Loading

9/11 தாக்குதலைத் தொடர்ந்து உலகெங்குமுள்ள அரசுகள் முஸ்லிம்கள்மீது அடக்குமுறைகளையும் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கிவிட்டன. கறுப்புச் சட்டங்களை இயற்ற, இஸ்லாமிய இயக்கங்களைத் தடை செய்ய அச்சந்தர்ப்பத்தை அவை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டன. சிமி முதன்முதலாகத் தடை செய்யப்பட்டதும் அப்போதுதான்.

2006ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் மானுடவியல் துறைப் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. சிமி குறித்து பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதற்காக முழு வீச்சுடன் செயல்படும் ஊடகமும் அதிகார வர்க்கமும் சிமியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எது என்ற அடிப்படையான கேள்வியைக் கண்டுகொள்வதே இல்லை. இக்கட்டுரை அந்த அம்சம் குறித்துதான் கவனப்படுத்த முனைகிறது.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? – கோவன் குழுவினர் பாடல்

Loading

டிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.

இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.

பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி

Loading

பாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க