கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய ஜனநாயகத்தின் உண்மைக் கதை

Loading

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகம்’, ‘ஜனநாயகத்தின் தாய்’ போன்ற உயர்வு நவிற்சியுடன் கூடிய ஒப்பீடுகள் இந்தியா குறித்த உண்மையைக் கூறுகின்றனவா? உண்மையில் இல்லை. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சாதாரணக் குடிமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான அச்சம் நிலவுகிறது என்பதே கள யதார்த்தமாகும். நடப்புநிலையைக் கேள்விகேட்கும் எவரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்

Loading

சமூக நீதியையும் சுயமரியாதை சிந்தனைகளையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அத்துடன் இப்போதுதான் இந்த நிலையா அல்லது இதற்கு முன்னரும் இதே நிலைதானா என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் படிக்க
kashmir 370 tamil காணொளிகள் குறும்பதிவுகள் 

சட்டப்பிரிவு 370 நீக்கம்: வரலாறும் அரசியலும்

Loading

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முடிவு மக்களையோ, மாநிலங்களவையையோ கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையான விவாதம்கூட இல்லாமல் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசின் இந்தச் செயலை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடங்கள்

Loading

தேர்தல் முடிவுகள்குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் அதனை அதன் இறுதி அரசியல் அத்தியாயமாகக் கொண்டாடுவதும், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை அதன் நிரந்தர வெற்றியாக அங்கலாய்ப்பதும் எதிர் தரப்பில் இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் வெற்றியை ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டதைபோல் சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் இதே மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இ.ந்.தி.யா Vs. பா.ஜ.க.

Loading

தேர்தல் நெருங்கநெருங்க பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்க்கட்சிகளும் ஃபாசிசத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் உணர வேண்டும். மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்தாலும் நாளை யார் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பலாம் என்றுதான் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இனி வரும் நாள்களில் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ.வின் கொடுங்கரங்கள் இன்னும் அதிகமானோரை நோக்கி நீளலாம். அரசியல் கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, செயல்பாட்டாளர்களுக்கு என்.ஐ.ஏ., சிலருக்கு இரண்டும் என்ற மிரட்டல்-அரசியலை பா.ஜ.க. மேலும் உக்கிரப்படுத்தவே செய்யும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் மணிப்பூர் பற்றி எரிகின்றது?

Loading

இந்தத் தாக்குதல்களை மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசாங்கமும் முதலமைச்சர் பிரேன் சிங்கும் தடுக்கவில்லை என்பது மட்டுமில்லை, ஊக்குவித்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினர். மெய்த்தி இனவெறியை ஊதிப் பெருக்கினர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்

Loading

“இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப் பன்மைத்தன்மையை அழித்து அதை ஒருபடித்தன்மையாக மாற்றும் முயற்சிகள் எல்லை மீறினால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்

Loading

இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

Loading

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்

Loading

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது.

மேலும் படிக்க