இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்
குஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது.
மேலும் படிக்க