காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முடிவு மக்களையோ, மாநிலங்களவையையோ கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையான விவாதம்கூட இல்லாமல் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசின் இந்தச் செயலை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசல்களில் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; “துரோகிகளை அழிக்க வேண்டும், பழிதீர்க்க வேண்டும்” போன்ற முழக்கங்கள் வெகு இயல்பாக எழுப்பப்படுவது இந்தியாவில் இன்று பரவியிருக்கும் வெறுப்புச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. அதே 90களின் இறுதியில் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனலில் பொது நிதியைக் கொண்டு ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தியாவில் ராமர் அரசியல் வலுவாகக் காலூன்ற வழிவகுத்தது. பாபர் மசூதிக்கு எதிரான கரசேவைக்கு ஆள் சேர்க்கவும் இது பயன்பட்டது. அதுபோல, இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இந்துத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர் எண்ணிக்கை, அன்று பாஜக ஆதரவு ஒன்றிய அரசின் ஆட்சி இருந்தது முதலான பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் பிழையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான தகவல் பிழைகளையெல்லாம் தாண்டி, இஸ்லாமிய வெறுப்பை உற்பத்தி செய்யும் தனது நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப் படம்.
பண்டிட்கள் பிரச்னையை அரசியலாக்குகிறதா பாஜக?
பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களா?
ஆளுநர் ஜக்மோகன் மீது குற்றம் சாட்டுவது சரியா?
கஷ்மீரிகளின் தற்போதைய நிலை என்ன?
ராணுவம் அங்கு குவிக்கப்படுவது நியாயமா?
குணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன. ஆனாலும் நீதிக்கான கஷ்மீரிகளின் போராட்டம் தொய்வின்றி தொடர்கிறது. அந்த வகையில், பிப்ரவரி 23ம் தேதியான இன்று கஷ்மீர் பெண்களின் போராட்ட நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பது மக்கள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலின் தொடக்கமே ஒழிய, வெறும் நிலஅபகரிப்பு அல்ல. நிலத்தை அபகரிப்பது அந்த மக்களைத் துன்புறுத்துவதற்குத்தானே தவிர, நிலத்தை அபகரிப்பதற்காக அந்த மக்கள் துன்புறுத்தப்படவில்லை.
நாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா, அறம் பிறழ்ந்தவையா? அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா? என்று நாம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
“இஸ்லாம் தனது மனித சமத்துவம் என்ற கருத்துருவாக்கத்தை ஒரு விளைவற்ற தத்துவமாக வழங்கவில்லை. இக் கருதுகோளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை நிறுவியது. அச் சமூகத்தில் பல்வேறு இனங்களையும் தேசங்களையும் முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் ஒன்று சேர்த்தது. அனைத்து இன, நிற, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளும் அழிக்கப்பட்டன. அது மட்டுமல்ல. இதே கொள்கையின் அடிப்படையில் ஒரு உலகளாவிய தேசத்தை நிறுவி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியது. முழு முஸ்லிம் உலகமும் ஒரே சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத் திகழ்ந்தனர். ஒருவர் –அவர் கிழக்கிலிருந்து வந்திருப்பினும் மேற்கிலிருந்து வந்திருப்பினும்- இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உடனே அவர் இஸ்லாமியச் சமூகத்தின் உறுப்பினராக மாறிவிடுவார்; மேலும் பிற முஸ்லிம்களைப் போன்றே சம உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் அனுபவிப்பார்.”