பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்! – உம்மு ஃகாலிது
தொடர்ச்சியாகவும் நீண்ட காலமாகவும் பெண்களிடம் பொய் சொல்லப்பட்டு வந்துள்ளது. பலர் ஒன்றிணைந்து தமது சுயலாபங்களுக்காகப் பெண்களை ஏமாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆணாதிக்கம் பற்றியோ, முஸ்லிம் ஆண்கள் பற்றியோ நான் பேசுவதாக எண்ண வேண்டாம். சில மேற்கத்திய சூன்யவாத நாத்திக மேட்டுக்குடிகளைப் பற்றிப் பேசுகிறேன். தமது சொந்த அஜென்டாக்களுக்காக, அவர்கள் பெண்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் சமூக வழமைகள் சிலவற்றை மாற்றி, இயந்திரங்களைப் போல மக்களைக் குறிப்பிட்ட வழியில் இயக்கியிருக்கிறார்கள்.ஊடகங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், புத்தகங்கள், நாவல்கள், பிரபல பத்திரிகைகள், பாடல் வரிகள், புகழ்பெற்ற கல்விநிலையங்கள் முதலானவற்றின் மூலம் உலகெங்கும் அவர்கள் பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். அமெரிக்கத் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஆறு சீசன்கள் வரை ஒளிபரப்பப்பட்ட தொடர் “செக்ஸ் அண்ட் த சிட்டி” (Sex and the City). அதன் மையக் கருத்து இதுதான்: ஒரு நவீனப் பெண் வாழ்வில்…
மேலும் படிக்க