கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

Loading

நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சில கட்சிகளிடம் கூட ஒரு வித அனுதாபப் பார்வை மட்டுமே இருக்கிறது. ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீது அனுதாபம் கொள்வதையும் தாண்டி அவர்களுடன் இணைந்து பயணிப்பதே, அதைவிட அவசியமாகும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம்களை மற்றமையாக்கும் லிபரல் சொல்லாடல்கள்

Loading

ஆக, பொதுவாக முஸ்லிம் empowerment-யும், குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆற்றல்படுத்தலையும் ஊக்குவிக்கும் காரணியாக முஸ்லிம் சமூகத்தின் சமய-சமூகக் கட்டமைப்புகள் செயல்பட முடியும். பொதுவாக முஸ்லிம் சமூகத்தையும், குறிப்பாக முஸ்லிம் பெண்களையும், பலவீனப்படுத்தும் வெளிகளாக ‘பொது’வெளிகளும் செயல்பட முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் புரிதல்கள் எதுவும் இல்லாமல் முஸ்லிம் backwardness-ஐ ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் அகவயச் சிக்கல்களாக நிரல்படுத்துவது ஒரு முஸ்லிம் விரோதச் செயல்பாடு இல்லையா? முஸ்லிம் மற்றமையாக்கத்தின் ஆற்றல் வரட்டுத்தனமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்குள் இல்லை. மாறாக, முஸ்லிம் மற்றமையாக்கத்தின் உயிர், நவீனமாகவும் மதச்சார்பற்றதாகவும் தெரியும் லிபரல் சொல்லாடல்களுக்குள்தான் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கொரோனாவை விட வேகமாகப் பரவும் இஸ்லாம்-வெறுப்பு வைரஸ்!

Loading

“நூற்றுக்கணக்கான முஸ்லிம் வீடுகளும் கடைகளும் அழிக்கப்பட்ட டெல்லி படுகொலைகள் நிகழ்ந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அதிகரித்திருக்கும் போலித் தகவல்களும் ஊறு விளைவிக்கும் வகுப்புவாத மொழியும் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது” என்று ஈக்வாலிட்டி லேப்ஸின் நிர்வாக இயக்குனர் தேன்மொழி சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், “மற்றொரு படுகொலைக்கான அச்சுறுத்தல் இன்னும் எஞ்சியிருக்கிறது” என அவர் எச்சரிக்கிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

முஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா?

Loading

கல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை

Loading

ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்

Loading

இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

Loading

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க