இஸ்லாமிய கல்வி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனியமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – ஃபைசல் மாலிக்

Loading

முன்னுரை அளவிலாக் கருணையாளனும், இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் CNNல் 2009ம் ஆண்டு வெளியான Generation Islam எனும் ஆவணப்படத்தில் ‘பாகிஸ்தானில் இஸ்லாமியக் கல்வி’ என்ற பகுதியில், “பழங்காலத்தில் அடைபட்டிருக்கும் ஒருவித இஸ்லாத்தையே பல மதரசாக்கள் பயிற்றுவிக்கின்றன. கணிதம், அறிவியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஒரு என்ஜிஓ பணியாளரை “பாகிஸ்தானின் மதரசாக்களை நவீனமாக்கும் போரில் முன்னணியிலிருப்பவர்” [1] எனப் பாராட்டியது. மதரசாக்களை [2] நவீன யுகத்துக்கு முந்தைய முஸ்லிம் கலாச்சாரத்தின் எச்சமாகவும், சமகாலத்துக்குத் தொடர்பற்றவையாகவும், நவீன உலகிற்கு முரணானவையாகவும் சித்தரித்தது இந்த ஆவணப்படம். முஸ்லிம் உலகம் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் காரணம் அது கல்வியை “நவீனமாக்காததே” என நாம் பரவலாக ஊடகங்களிலும் அறிவுஜீவி வட்டாரங்களிலும் அரசுசார் நிறுவனங்களிலும் [3] காணும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இப்படம் அமைந்தது. இப்படிச் சொல்வதன் வழியாக முஸ்லிம் உலகின் பல…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்

Loading

‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

ஃபிரான்ஸ் ஃபனானும் இஸ்லாமும்

Loading

அல்ஜீரியாவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையிலான வீரஞ்செறிந்த காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட மரபுதான் ஃபனான் குறிப்பிடும் அந்தத் “தன்னெழுச்சி”. பத்தொன்பதாம் நூற்றாண்டு நெடுகிலும், ஏன் 1940-50கள்வரை கூட உயிர்ப்போடு இருந்த ஓர் போராட்டம் அது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

முஸ்லிம் மனதை காலனிய நீக்கம் செய்தல் – யூசுஃப் பிராக்ளர்

Loading

இன்று மூன்றாம் உலக மக்கள் தமது பூர்விக அமைப்புகளைப் பதிலீடு செய்திருக்கும் காலனித்துவ அமைப்புமுறைகளைச் சவாலுக்குள்ளாக்கி, தமது சொந்த அறிவமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளைத் தேடிவருகின்றனர். இது புதியதொரு இயக்கமல்ல; உலகில் இன்று நடைபெற்றுவரும் காலனித்துவ நீக்க இயக்கம், உண்மையில் வெகுமுன்னரே துவங்கியவொரு தோற்றப்பாடு என்பதை நினைவில் இருத்துவது முக்கியம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நவீன ‘ஓரியண்டலிசம்’

Loading

திருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வில் ஊன்றி நின்று, இஸ்லாமிய விமர்சன சட்டகத்தைப் பேணி, சொந்தச் சொல்லாடல்களை பிரயோகித்து நம் விமர்சனங்களை அமைத்துக் கொள்ளும் போதே நம்மால் இஸ்லாமிய செயற்திட்டத்தை முன்னகர்த்த முடியும். அதுவன்றி, இவ்வாறு கடன்பெற்ற சட்டகங்களையும் சொற்களன்களையும் பயன்படுத்த முனையும் போது, நம்மையும் அறியாமல் பகைவர்களின் கரங்களில் கருவிகளாய் மாறுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க