கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்து நாஜிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்!

Loading

ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும் இந்து நாஜிகளுக்குமே சொந்தமானது. ஒருபோதும் அது கம்யூனிசமாக முடியாது என்பதை இந்த இந்துக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்; அல்லது நாம் அவர்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்

Loading

இந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறுபாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு? அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே! ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏ.பி.வி.பி.யையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓ.வையும் (SIO) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்.எஃப்.ஐ. (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் SIO போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாகச் செயல்படுவது கல்வி வளாகங்களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவதற்கான முன்நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்புகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

மேலும் படிக்க