social media islam tamilநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சமூக ஊடகம் தொடர்பான இஸ்லாமிய ஒழுங்குகளை நினைவூட்டும் புத்தகம்

Loading

நாற்பது நபிமொழிகள் என்றவொரு வடிவம் நம்மிடத்தில் மிகவும் பிரபல்யமானது. நாற்பது நபிமொழிகள் என்ற தலைப்பில் ஏராளமான தொகுப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அந்த வரிசையை அழகுபடுத்தும் மற்றுமொரு ஆபரணமாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது ‘சமூக ஊடகங்கள் பற்றி நாற்பது நபிமொழிகள்’ என்ற சிறிய புத்தகம். இந்த தலைப்பே என் ஆர்வத்தைத் தூண்டியது. புத்தகம் என் கைக்கு வந்தவுடன் படித்து விட்டேன்.

சமூக ஊடகங்கள் பயன்படுத்தும் ஒவ்வொவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. வெறுமனே நபிமொழிகளைக் குறிப்பிடுவதோடு மட்டுமில்லாமல் அவற்றுக்கு சிறிய அளவில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. பேராசிரியர் இர்ஃபான் தமிழாக்கம் செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் கட்டற்ற சுதந்திரம் இருக்கிறது. அவை சில சமயங்களில் தேவையற்ற சிக்கல்களில் மன உளைச்சல்களில் நம்மை ஆழ்த்தி விடலாம். ஆனாலும் அவற்றை நாம் முற்றிலுமாகத் தவிர்த்துவிட முடியாது. அவற்றை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவற்றின் நன்மையும் தீமையும் அளவிடப்படுகின்றன. அவை மக்களிடம் கருத்துகள் வேகமாகச் சென்றடைவதற்கான ஊடகங்கள்.

எதிர்மறையான விசயங்கள் வேகமாகப் பரவும் இயல்புடையவை என்பதால் அவை சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவுகின்றன. ஆனாலும் அவற்றை நேர்மறையான, நல்ல விசயங்களைப் பரப்புவதற்கும் பயன்படுத்த முடியும், நாம் சில ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால். இந்தச் சிறிய புத்தகம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில ஒழுங்குகளை நமக்கு நினைவூட்டுகிறது.

🛒  ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/samooga-oodagangal-patri-40-nabimozhigal
📞  வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: +91-7550174762 

Related posts

Leave a Comment