இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? – கோவன் குழுவினர் பாடல்
டிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.
இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.
பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.
இந்தக் காலித்தனத்தை, கொலைபாதகத்தை “பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம்” என்று சொல்லி, பழியை நம் மீது தள்ளிவிடுகிறது.
நீங்கள் சொல்லுங்கள், நீங்களா இடிக்கச் சொன்னீர்கள்?
நீங்களா முஸ்லீம் பெண்களை மானபங்கப்படுத்தச் சொன்னீர்கள்?
நீங்களா கொலைசெய்யச் சொன்னீர்கள்?
********
https://www.youtube.com/watch?v=7OHObipkYTk
இடித்து விட்டான் மசூதியை, இது சரிதானா?
இந்து மக்கள் விருப்பம் என்றான், உன்னைக் கேட்டானா?
காலங் காலமாய் அழியாத நேசம்…
கடப்பாரையாலே வீழ்ந்ததென்றால், இது என்ன தேசம்?
தேசீய நாயகன்தான் ராமன் என்றான்…
மசூதி அவமானச் சின்னம் என்றான்…
நெஞ்சைப் பிளந்ததே… கடப்பாரைகள் கூட்டம்
இந்து நஞ்சை விதைத்ததடா மதவெறி ஆட்டம்
மதமெனும் சொல்லறியா மழலைகள்…
முகத்திரைக்குள் நடுங்கும் தாய்முகங்கள்
குஜராத்தில் நடந்ததே… கரசேவை தொடர்ந்ததே…
தாயைக் கற்பழித்த கூட்டம் கூட, ராம்! ராம்! என்றதே.
ரத்தம் சுவைத்த கொலைக் கோடரிகள்…
குத்திக் குடல் சரிக்க சூலங்கள்…
சட்டம், நீதி அதன் காலடியில்…
துப்பாக்கிகள் மௌன சாட்சியங்கள்.
சரிந்து வீழ்ந்ததே… மதச்சார்பின்மை மாயம்
புரிந்ததடா ரகசியம்… இது இந்து ராஜ்ஜியம்!
இடித்தது இந்து மக்கள் விருப்பம் என்றான்,
நாட்டை உடைத்ததும் உன்னுடைய ஆணை என்றான்.
அனைத்தையும் பார்ப்பனனே வகுத்துத் தந்தான்,
உன் அமைதியை ஆதரவாய் மாற்றிக் கொண்டான்.
இனி போதும் போதுமே, உன் மௌனம் போதுமே,
இந்து என்னும் திரைகிழித்து வந்திடு தோழனே!
(நன்றி: Thesa Bhakthal Meme Channel)