மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா
“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”
மேலும் படிக்க