இஸ்லாம் Vs. நவீனத்துவம் (4)
மனித உள்ளுணர்வு பல்வேறு விஷயங்களில் பெரும்பாலான மக்கள் பொது ஏற்பு கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணம் மனிதன் இயல்பாகக் கொண்டிருக்கும் உள்ளுணர்வுதான். அது தர்க்கத்துக்கும் அனுபவவாதத்துக்கும்கூட ஓர் அடிப்படையாக விளங்குகிறது. முரண்படா கொள்கை என்பது தர்க்கத்தின் ஆதாரமான கருத்தாக்கமாகும். உதாரணத்துக்கு, என் கையிலுள்ள புத்தகத்தின் அட்டை கறுப்பு நிறம் என்றும், கறுப்பு நிறமல்ல என்றும் சொன்னால், அதில் முரண்பாடு உள்ளது. இரண்டுமே சரியான பதிலாக இருக்க முடியாது. ஆக, அதில் தர்க்கப் பிழை இருக்கிறது. சரி, உங்களிடம் ஒருவர் இதில் முரண்பாடு எங்கே இருக்கிறது, இரண்டுமே சரிதானே என்று கேட்டால், எப்படி அவருக்கு யதார்த்தத்தை விளக்குவீர்கள். அவரை மனப்பிறழ்வு கொண்டவர் என்றல்லவா நினைப்பீர்கள்? காரணம், இயல்பாக மனிதர்கள் சிந்திக்கும் விதத்தில் அவர் சிந்திக்கவில்லை என்பதால். தர்க்கத்தைப் போன்றே அனுபவவாதத்துக்குள்ளும் உள்ளுணர்வு தொழிற்படுகிறது. குழந்தைகளுக்கு மொழியை எப்படி கற்பிப்பீர்கள்? ஒரு…
மேலும் படிக்க