தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்

Loading

இஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் வழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)

Loading

இஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா?!

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)

Loading

ஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)

Loading

நபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய மதிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறையியல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற பாரம்பரிய மரபினை படிப்பதிலிருந்தே துவங்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க