தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (7)
தாராளவாத கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு கருத்தாக்கம் தத்துவவியலாளர் ஜான் ரால்ஸ் முன்வைத்த அறியாமை திரை (Veil of Ignorance). அவரின் கருத்துகள் கல்விப்புலத்தில் பலத்த செல்வாக்கு செலுத்தக்கூடியவை. ஒரு நீதிமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான சட்டங்களை நாம் எப்படி வகுப்பது எனும் கேள்விக்கு விடையாக அறியாமை திரை என்ற கருத்தாக்கத்தை அவர் பரிந்துரைத்தார். அது ஒரு சிந்தனைப் பரிசோதனையாக அவரால் முன்னெடுக்கப்பட்டது. நவீனத்துவத்துக்கும் மதச்சார்பின்மைமயமாக்கலுக்கும் முன்பு வாழ்ந்தோரிடம் இதே கேள்வியைக் கேட்டால், இறைவனையும் வேதங்களையும் நாங்கள் அணுகுவோம் என்பார்கள்.
மேலும் படிக்க