சிறுகதை முக்கியப் பதிவுகள் 

மம்மர் (சிறுகதை)

Loading

முழுக்கவும் நரைத்திருந்தாலும் முடியின் அடர்த்தியில் குறைவில்லாதிருந்தது. முகமெல்லாம் ஊதி குழந்தையின் மப்படித்த வயிறுபோல் உப்பலாக இருந்தது. கால் வீக்கம் மட்டும் இல்லையென்றால் தடி ஊன்றாமலே நடப்பவர் போலத்தான் இருந்தார். இவரைவிடவும் பலமடங்கு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருந்த தாத்தா, ஏன் சில மாதம் இடைவெளியில் மறைந்துபோனார் என்று வினவிக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

‘க’ஞானம்

Loading

முதுகு ஒட்டிக் கொண்டு வியர்த்து எண்ணெயாகி டைல்ஸ் தரை நழுவியது. சற்று நகர்ந்த பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில் ஜன்னலின் கிராதி கோணவும் தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.

பச்சையும் கருமையுமாக இடது கெண்டைக்காலில் முந்திரிக்கொத்து போல சுருண்டிருந்த சுருள் நரம்பு பிரச்சினைக்கு விபரீத கரணி ஆசனம் சிறந்தது என யோகாச்சார்யன் இஸ்மாயீல் திருவனந்தபுரம் வானொலியில் சொல்லியதைக் கேட்டிருந்தான். அதன் பேரில் ஒரு வாரமாக காலை அல்லது மாலை என நூகின் யோகாசனப் பயிற்சி தீவிரமடைந்தது.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

மூன்று நாள் ஜமாஅத் (சிறுகதை)

Loading

தொலைவில் சிலோன் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களை முஹல்லா கஷ்த்திற்காக காதுமந்தம் சதக்கத்துல்லா வழிநடத்தி வந்தார். சிலோன் ஜமாஅத்துதான் ஏகேக்கு சரி என்ற முன்தீர்மானத்தில் காதுமந்தம் சதக்கத்துல்லா ஏகே காக்காவை வளைத்துப் பிடித்துவிட்டார். சிகரட்டிற்கான விலையை எண்ணி காதுமந்தம் சதக்கத்துல்லாவை மனத்திற்குள் சபித்தவாறே புகையும் சிகரட்டை காலில் போட்டு நசுக்கியவாறே அவர்கள் சொன்ன சலாமிற்கு விடையளித்தார் ஏகே காக்கா.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

திரவியம் (சிறுகதை)

Loading

ஏதோ ஒரு பொல்லா நாள். மேலதிகாரி இன்ஸ்பெக்சன் வர, கஸ்டம்ஸ் கெடுபிடியில் ஒரே நாளில் பதினைந்து குருவிகளோடு சரக்குகள் மாட்டிக்கொண்டன. சரக்கு என்றால் ஒவ்வொரு குருவி தலையிலும் இரண்டரை லட்சம் மதிப்புள்ள சரக்கு. அப்பாஸ் வாழ்க்கையே மாறிப்போனது. தெரிந்த லாபிகளில் மூவ் செய்தும், சரக்கு கைக்கு வந்துசேரவில்லை. அன்று அணைந்ததுதான் சேட்டின் செல்போன், இன்றுவரை அவரிடம் பேசமுடியவில்லை.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

ஆசான் (சிறுகதை)

Loading

தான் என்னதான் சிந்தித்தாலும் ஆசான் போட்டிருக்கும் கருங்கல் அஸ்திவாரத்தை தாண்ட இயலாது என்ற உண்மை தெளிவானதால் கமாலின் உடலும் மனதும் சோர்ந்தது. தலையிலிருந்து எரி மெழுகு உருகியது. அவரை விட்டால் தனக்கு வழிகாட்டுபவர் யாருமில்லை என்ற நினைவு வர கழிவிரக்கம் ஊற்றாகிப் பெருகியது.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

உம்மாவின் துப்பட்டி (சிறுகதை)

Loading

புதிதாக வந்த வெளிநாட்டுத் துப்பட்டி அதுவரை உம்மா உடுத்தியிருந்த ரேசன்கடை இலவச வெள்ளைத்துணிக்கு விடைகொடுத்திருந்தது. உறவுக்காரர்களின் திருமணத்திற்கு இனி சென்றால் பக்கத்துவீட்டு சைனம்புவிடம் இரவல் துப்பட்டி வாங்கி ஏழ்மையை மறைக்கத் தேவையில்லை என்ற உற்சாகம் உம்மாவிற்குப் புதுத்தெம்பைக் கொடுத்தது. அதன் ஓரப்பூக்களில் அத்தாவின் வாசம் இருந்திருக்க வேண்டும். அவரது ஸ்பரிசத்தை அவள் அணியும்போது அது கொடுத்திருக்க வேண்டும். அதன் பூக்களைத் தேடி வந்தடையும் வண்ணத்துப்பூச்சிகள் எங்கோ ஒரு தூரத்தில் புலாவ் பசார் தீவில் சோற்றுப் பானையைக் கிண்டிக்கொண்டிருக்கும் அத்தா அனுப்பியதாக உம்மா உணர்ந்திருப்பாள். அதுதானே அத்தா இறந்து ஏழுவருடங்களுக்குப் பின்னும் அந்தத் துப்பட்டியை உம்மா உடுத்தி வருவதன் காரணமாக இருக்கும்.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

ஒரு சொல் (சிறுகதை)

Loading

“இருபத்தஞ்சு வருஷம் கால் நூற்றாண்டு உழச்சுப்போட்டுதான் இக்கிறேன். மாசச் செலவுக்கு இல்லன்னு சொல்லி யார்ட்டயும் போய் நின்னதில்ல. இன்னிக்கு இந்த மாதிரி சிக்கல். புது முயற்சி எடுத்தா கொஞ்ச நாளய்க்கு நடக்குது, அப்புறம் வாய் பாக்க வேண்டியீக்குது. அல்லாஹ்தான் தரணும். காச உண்டாக்க முடியலன்டா எவன்டயும் போய் நிக்க மாட்டேன். அது மட்டும் உறுதி. பேசாம தோல்விய ஒத்துக்கிட்டு மல்லாக்கப் படுத்துறுவேன்.”

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

அத்தர் (சிறுகதை)

Loading

வெள்ளை உடை தரித்த இரண்டு வீரர்கள் கையில் வாளுடனும் நீண்ட தலைப்பாகையுடனும் காவல் இருக்க, பச்சைத் தலைப்பாகையுடன் நீண்ட வெள்ளைத் தாடியுடன் இஸ்லாமிய ஸூஃபிப் பெரியவர் அகர் கட்டைகளிலான தஸ்பீஹ் மாலையை உருட்டிக்கொண்டிருந்தார். அருகில் மற்றொரு உருவம். ‘மினல்லாஹி இலல்லாஹி… மினல்லாஹி இலல்லாஹி…’ அதன் முதல் மணியை அவரது கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் உருட்டியபோது நான் ஓடையிலிருந்து தூக்கியெறியப்பட்டு அவர்களுக்குச் சமீபமாக நின்றுகொண்டிருந்தேன். மலாயன் புலிக்குட்டிகள் நான்கு ‘உர்ரெனச்‘ சுற்றிக்கொண்டிருந்தன.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

சங்குத்தவம் (சிறுகதை)

Loading

”இந்தக் காலத்தில் அறபியை மட்டும் படிச்சாப் போதுமா? உலகம் பூரா இங்கிலீஷ்காரன் தன்னோட பாஷையைத் திணிச்சி வச்சிருக்கான்… அதுலேர்ந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று மக்கள் கூடியிருந்த நிஜாமியா வளாகத்தில் நான் காலையில் முழங்கியபோது ஊர் மக்களுக்குக் கலககாரனாகத் தெரிந்தேன். ”கால் காசு படிப்புனாலும் இங்கிருந்து இராம்நாட் கிறிஸ்துவ ஸ்வார்ட்ஸ் ஸ்கூலுக்குத்தான் போகணும்” என்றேன்.

மேலும் படிக்க