காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (1)
மேற்கத்திய சக்திகள் உலகமெங்கும் தம் மேலாதிக்கத்தை நிறுவிய வரலாற்றையும், இந்தியத் துணைக் கண்டத்தில் காலனியத்துக்கு எதிரான போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றதையும் நாம் அறிவோம். வரலாற்றை ஆராய்ந்தால் காலனிய எதிர்ப்பில் முஸ்லிம் சமூகத்துக்கு முதன்மையான இடமிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது தொடர்பாக பல அற்புதமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில், காலனிய எதிர்ப்புப் போரில் பங்குகொண்ட முஸ்லிம்களின் தீரமிகு வரலாற்றைப் பதிவு செய்வதும், இளைய தலைமுறை வாசகர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதுமே இந்தத் தொடரின் நோக்கம். இதில் முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் தொகுத்தளிக்கப்படவுள்ளன. வாசகர்கள் தொடரை முழுமையாக வாசித்துப் பயனடைய வேண்டும். குஞ்ஞாலி மரைக்காயரும் போர்ச்சுகீயர் எதிர்ப்பும் கேரளாவின் பொன்னானியில் பிறந்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். இவரின் முன்னோர்கள் சாமுத்திரி மன்னனிடம் தளபதிகளாக இருந்தவர்கள். இவரது இயற்பெயர் முஹம்மது. மன்னர் இவரை குஞ்ஞு அலி என்று அழைத்தார். பின்னாளில்…
மேலும் படிக்க