தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (2)
தீங்குக் கொள்கை அறம் சார்ந்த வழிகாட்டலை வழங்குவதாக தாராளவாதம் வாதிடுகிறது. பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எதையும் நாம் செய்யலாம் என்பதே தீங்குக் கொள்கையின் சாரம். “ஒரு சிவில் சமூகத்தின் ஏதேனுமோர் அங்கத்தவர் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பதாக இருந்தால் அது பிறருக்கு அவரால் தீங்கு ஏற்படாமல் தடுப்பதற்காகவே இருக்க வேண்டும்” என்பார் நவீனச் சிந்தனையாளரான ஜான் ஸ்டூவர்ட் மில் (On Liberty, 1859). இதையொத்த கருத்தையே ஜான் ழாக், இம்மானுவேல் கான்ட் உள்ளிட்டோரும் முன்வைத்தார்கள்.
அறம்சார் விதிமுறைகள் தீங்கு விளைவிப்பதோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. எனவே, சரி – தவறுகளை தீங்குக் கொள்கையைக் கொண்டு மட்டுமே வரையறுத்துவிட முடியாது. எவையெல்லாம் தீங்கு விளைவிப்பவை என்பதேகூட ஒவ்வொருவரின் சிந்தனைச் சட்டகத்தைப் பொருத்து மாறுபடக்கூடியதுதான்.
மேலும் படிக்க