கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிறையிலிருந்து… ஷர்ஜீல் இமாம்

Loading

மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020ல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இன்றுடன் மூன்று வருடங்களை நிறைவுசெய்கிறார். திகார் சிறையிலிருக்கும் ஷர்ஜீல் இமாம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

எஸ்.எல்.எம். ஹனீபா – ஒரு முன்னோடியின் வழித்தடம்

Loading

எஸ்.எல்.எம் தன்னுடைய வாழ்க்கையை தேர்வுசெய்ததும், அதை ஒழுங்கமைத்துத் தொடர்ந்ததும் சவால்கள் நிறைந்த ஒன்று. இந்தச் சவால்களின் வழியான பயணத்தின் அனுபவங்களே அவரை பலப்படுத்தின. அவரை வீரராக்கின. இடையில் வந்த அத்தனை நெருக்கடிப் புயல்களிலும் அவர் வீழ்ந்துவிடாது நிமிர்ந்து நிற்கும் பெரியதொரு ஆல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன விடுதலை கீதம் வாசிக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை!

Loading

உலகக் கோப்பையில் பொங்கிப் பெருகியிருக்கும் ஃபலஸ்தீன விடுதலை ஆரவாரம் அம்மக்களுக்கு அவர்கள் தனித்து விடப்படவில்லை என்ற செய்தியையும், உலகுக்கு ஃபலஸ்தீன விடுதலை வேட்கை உயிர்ப்புடன் இருக்கிறது என்ற செய்தியையும் பறைசாற்றியிருக்கின்றது. அதே நேரத்தில், இஸ்ரேல் என்னதான் அறபுலக அரசுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு தனது இருப்பை அங்கீகரிக்கச் செய்தாலும், மக்களைப் பொறுத்தமட்டில் அது என்றுமே ஒரு நாடாக அங்கீகாரம் பெற முடியாது என்ற செய்தி பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தப்பட்டிருக்கின்றது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (7)

Loading

தாராளவாத கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு கருத்தாக்கம் தத்துவவியலாளர் ஜான் ரால்ஸ் முன்வைத்த அறியாமை திரை (Veil of Ignorance). அவரின் கருத்துகள் கல்விப்புலத்தில் பலத்த செல்வாக்கு செலுத்தக்கூடியவை. ஒரு நீதிமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான சட்டங்களை நாம் எப்படி வகுப்பது எனும் கேள்விக்கு விடையாக அறியாமை திரை என்ற கருத்தாக்கத்தை அவர் பரிந்துரைத்தார். அது ஒரு சிந்தனைப் பரிசோதனையாக அவரால் முன்னெடுக்கப்பட்டது. நவீனத்துவத்துக்கும் மதச்சார்பின்மைமயமாக்கலுக்கும் முன்பு வாழ்ந்தோரிடம் இதே கேள்வியைக் கேட்டால், இறைவனையும் வேதங்களையும் நாங்கள் அணுகுவோம் என்பார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (6)

Loading

இஸ்லாம் பாலின ரீதியாகவும், சமய நம்பிக்கை சார்ந்தும் பாகுபாடு கற்பிப்பதாகக் குற்றம்சாட்டப்படுவதுண்டு. இவை குறித்து முந்தைய பாடங்களில் நாம் விவாதித்துள்ளோம். பொதுவாக, மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதே அதனளவில் பிரச்னைக்குரியதோ எதிர்மறையானதோ அல்ல. அது அநீதியானதாக இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். இஸ்லாம் எல்லா விதமான பாகுபாட்டையும் நிராகரிப்பதில்லை. எவ்விதத்திலும் பாகுபாடு கூடாது என்று தாராளவாதிகள் சவடால் விடலாம். ஆனால், யதார்த்தத்தில் பல விஷயங்களில் நவீனத்துவ சிந்தனைச் சட்டகம் பாகுபாட்டை ஆதரிக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (5)

Loading

பல இஸ்லாமியவாத இயக்கங்கள் சுதந்திரத்துக்காக வாதிடுவோராகத் தங்களை அடையாளப்படுத்துவதுண்டு. எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சிக்குக்கூட சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சி என்றுதான் பெயர். ஈரானியப் புரட்சியின்போது கொமைனீ போன்றோர் ஆஸாதி (சுதந்திரம்) என்பதைத் தம் பிரதான முழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இஸ்லாமியவாதிகள் மதச்சார்பற்றோராகவோ தாராளவாதியாகவோ இல்லையென்றாலும், சுதந்திரம் எனும் சொல்லாடலை அவர்கள் ஒரு மதிப்பீடாக முன்வைத்தார்கள். உண்மையில் அந்தச் சொல்லை நாம் விரும்பியவாறு பொருள் கொள்ள முடியும்.

மேலும் படிக்க
sepoy mutiny tamil கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (2)

Loading

சிப்பாய்ப் புரட்சியின் நாயகர்கள் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு இந்திய விடுதலை வரலாற்றில் முதன்மையான இடமுண்டு. அதில் பங்குகொண்டு போராடியவர்களில் மிக முக்கியமானவர் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி. 1797ல் பிறந்த இவர், அறபி, உருது, பார்ஸி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்ற பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். சமஸ்தான மன்னர்கள் இவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். சில சமஸ்தானங்களில் நீதிபதியாகவும் பணி புரிந்தார். இந்திய மன்னர்களுக்கு இடையே விரோதத்தை விதைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் பெரும் வெற்றி பெற்று இறுமாப்புடன் இருந்த ஆங்கிலேய அரசு, இந்திய செல்வத்தை தொடர்ச்சியாகக் கொள்ளையடித்து வந்தது. அதுகுறித்து சமஸ்தான மன்னர்களுக்குப் புரிய வைத்துடன், முகலாய மன்னர் பஹதூர்ஷா ஜாஃபர் தலைமையில் 1857 சுதந்திரப் போராட்டம் நடைபெற வித்திட்டவர் அல்லாமா பஜ்லேஹக்…

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (1)

Loading

மேற்கத்திய சக்திகள் உலகமெங்கும் தம் மேலாதிக்கத்தை நிறுவிய வரலாற்றையும், இந்தியத் துணைக் கண்டத்தில் காலனியத்துக்கு எதிரான போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றதையும் நாம் அறிவோம். வரலாற்றை ஆராய்ந்தால் காலனிய எதிர்ப்பில் முஸ்லிம் சமூகத்துக்கு முதன்மையான இடமிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது தொடர்பாக பல அற்புதமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில், காலனிய எதிர்ப்புப் போரில் பங்குகொண்ட முஸ்லிம்களின் தீரமிகு வரலாற்றைப் பதிவு செய்வதும், இளைய தலைமுறை வாசகர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதுமே இந்தத் தொடரின் நோக்கம். இதில் முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் தொகுத்தளிக்கப்படவுள்ளன. வாசகர்கள் தொடரை முழுமையாக வாசித்துப் பயனடைய வேண்டும். குஞ்ஞாலி மரைக்காயரும் போர்ச்சுகீயர் எதிர்ப்பும் கேரளாவின் பொன்னானியில் பிறந்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். இவரின் முன்னோர்கள் சாமுத்திரி மன்னனிடம் தளபதிகளாக இருந்தவர்கள். இவரது இயற்பெயர் முஹம்மது. மன்னர் இவரை குஞ்ஞு அலி என்று அழைத்தார். பின்னாளில்…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (4)

Loading

சமத்துவம் தாராளவாதத்தின் முக்கியமான கருத்தாக்கங்களுள் ஒன்று சமத்துவம். அது இஸ்லாத்திலும் பலமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், இந்த விஷயத்தில் இவ்விரு கருத்தியல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. பொத்தாம் பொதுவாக சமத்துவம் என்று சொல்வதில் பொருளேதுமில்லை. ஒவ்வொரு சிந்தனைச் சட்டகத்துக்கும் தகுந்தாற்போல் சமத்துவத்துக்கான வரையறை மாறுபடும். பொதுவாக, இருவர் ஒரே குற்றத்தைச் செய்தால் அவர்களிடம் ஒரே அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பாரபட்ச நடவடிக்கைகள் கூடாது எனச் சொல்கிறோம் அல்லவா? அது மனித உள்ளுணர்விலுள்ள சமத்துவக் கண்ணோட்டத்திலிருந்து வருவதே. அதேவேளை, சமத்துவம் தொடர்பில் நுட்பமான பல அம்சங்கள் இருப்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். பீட்டர் வெஸ்டன் எழுதிய The Empty Idea of Equality என்ற நூலில் சமத்துவம் குறித்து விவாதிக்கும்போது, ஒரே தன்மையிலான விவகாரங்களை ஒரே விதமாகவும், விவகாரங்கள் வேறுபடும்போது அவற்றின் தன்மைக்குத் தகுந்த விதத்திலும் அணுக வேண்டும் எனும் பொருள்பட…

மேலும் படிக்க
daniel haqiqatjou liberalism tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (3)

Loading

எல்லாச் சட்டங்களுக்கும் பின்புலத்தில் ஒரு சிந்தனைச் சட்டகம் இருக்கிறது. அனைவருக்கும் பொதுவான, நடுநிலையான சிந்தனைச் சட்டகம் சாத்தியமற்றது. மதச்சார்பற்ற சட்டங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை என்று வாதிடப்படலாம். ஆனால், அவற்றுக்கு நவீன சிந்தனைச் சட்டகம் ஆதாரமாக விளங்குகிறது.

அந்தச் சட்டகத்தின் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் வழியாக நவீனச் சிந்தனையும், அதற்குத் தோதுவான வாழ்வொழுங்கும் குடிமக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவற்றை எவரேனும் எதிர்த்தால் அவர் சிறைவைக்கப்படவோ அபராதம் விதிக்கப்படவோ நேரிடும் அல்லவா? பிறகு எப்படி அவற்றுக்கு எந்தச் சார்பும் இல்லை என்றும், இன்னொருவர் நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்றும் அவர்கள் கூற முடியும்?

மேலும் படிக்க