beast reviewகுறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பீஸ்ட்: விமர்சனம் எழுதக்கூட தகுதியற்ற குப்பை – ப. பிரபாகரன்

Loading

FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பைதான் இந்த Beast திரைப்படம். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், உமர் ஃபாரூக், இஸ்லாமியத் தீவிரவாதிகள், இன்ஷா அல்லாஹ், நேர்மையான தேசப்பற்று மிக்க அல்தாஃப் எனும் இஸ்லாமிய அதிகாரி, இஸ்லாமியக் குழந்தைகள் மீதான நாயகனின் கழிவிரக்கம் என படம் நெடுக தேர்ந்த ஆர்எஸ்எஸ் மூளையோடு படமாக்கியிருக்கும் நெல்சனுக்குக் கடும் கண்டனங்கள்.

30 வருடத்திற்கு முன்னரே விஜயகாந்த், அர்ஜுன் கழட்டிக் காயப்போட்ட பழைய ஜட்டியை விஜய்க்கு மாட்டிவிட்டு வெறுப்பு அரசியல் பேசியிருக்கிறார் நெல்சன். சரி.. உருவாக்கம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் முதல் பாதி கொடூர மொக்கையாக இருக்கிறது; இரண்டாம் பாதி முதல் பாதியைவிட மும்மடங்கு கொடூர மொக்கையாக இருக்கிறது. தியேட்டர் உள்ளே உக்கார்ந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள செல்போனை நோண்டித் தப்பிப்பதே அத்தியாவசியமாகிறது.

படத்தை அக்குவேராக ஆய்ந்து நாறடிக்க ஆசைதான் என்றாலும் இதுபோன்ற கொடூர நச்சுக் குப்பைகளை ஒதுக்கித் தள்ளுவதே சாலச் சிறந்தது எனும் முடிவால் கை விடுகிறேன். விமர்சனம் எழுதக்கூட தகுதியற்ற குப்பைதான் இந்த beast.

நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும்போது, அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும்கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

BEAST – WORST!

Related posts

Leave a Comment