றமளான்: நம்பிக்கையின் மாதம்!
றமளான் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுகும் முஸ்லிம்களுள் பலர் மற்ற நாட்களில் பள்ளிவாசல்களில் நுழைவதுகூட அரிதாகிப்போவது ஏன்? முஸ்லிம்கள் றமளான் முழுவதும் நோன்பிருக்கிறார்கள்; அவர்களில் எந்த ஒருவரும் ஏன் தனிமையில் இருக்கும்போதுகூட உணவருந்துவதோ தண்ணீர் பருகுவதோ இல்லை? மற்ற நாட்களில் குர்ஆனைத் திறந்தும் பார்க்காத பலரால் எப்படி றமளானில் தினமும் அதை ஓத முடிகிறது?
மற்ற நாட்களில் இல்லாத வகையில் முஸ்லிம்களிடையே றமளானில் நிகழும் இப்படியான மாற்றம் வியப்பூட்டக்கூடியது. அந்த மாற்றம் அற்புதமானதும் அழகானதும்கூட! உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் றமளான் மாதத்தில் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் வணக்க வழிபாடுகளை அதிகரிப்பதிலும் பிரார்த்தனைகளின் மூலம் தங்களின் இறைவனது நெருக்கத்தை அடைய முயற்சிப்பதிலும் மிக அதிகமாக ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். அதேபோல், பாவச் செயல்களிலிருந்து விலகி தவ்பா செய்து இறைவனது பக்கம் மீள முயல்வதையும் நாம் கண்கிறோம்.
மேலும் படிக்க