இஸ்லாம் Vs. நவீனத்துவம் (1)
இஸ்லாம், நவீனத்துவம் ஆகியவற்றின் சில பகுதிகள் பரஸ்பரம் ஒத்துப்போகக்கூடும். ஆனால், இரண்டையும் நாம் குழப்பிக்கொண்டால் சிக்கல் உருப்பெறும். ஒரு சிந்தனைச் சட்டகம் உங்கள் சிந்தனையை, உணர்வை, அறிவுக்கும் நெறிமுறைக்குமான உங்களது உரைகல்லை, உலகம் குறித்த உங்களது புரிதலை, சுயம்சார் புரிதலை எல்லாம் தீர்மானிப்பதாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மில் பலருக்கு இஸ்லாம் குறித்து குழப்பங்களும் சந்தேகங்களும் எழக் காரணமும் சிந்தனைச் சட்டகம் சார்ந்ததே. இதை சரியாக இனங்காணாததன் விளைவாகவே நவீனத்துவ முஸ்லிம்கள் தடம் புரள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தின் விளிம்பில் நிற்பவர்கள். அதனால் சிலபோது நவீனத்துவ கருத்துநிலையின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிடுவார்கள்.
மேலும் படிக்க