குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு தமிழ் முஸ்லிமின் இலங்கைப் பயண அனுபவப் பதிவு (பகுதி 1)

Loading

தமிழக அரசியல் பண்பாட்டு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி என்பது ஏன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களை பிற தமிழர்களோடு இணைத்து அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான். அத்தகைய கேள்வியின் அடியாக உள்ள அனுமானம் மத அடையாளத்திலிருந்து தனி தேசிய இன அடையாளம் உருவாக முடியாது என்று கருதுவதும்தான். இன அடையாளம் என்பது மதம், மொழி, பிரதேசம் போன்ற சமூக வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழமைவுக்குள் உருவாகி வருவதே.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹலால் லவ் ஸ்டோரி: அறம், அழகியல், அரசியல்

Loading

‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதன் மாறுபட்ட கதையம்சத்தினாலும், பல்வேறு அடுக்குகளைக் கொண்ட கதைசொல்லல் பாணியாலும், பேசிய அரசியலாலும் பரவலான கவனத்தைப் பெற்றதோடு, பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று ஒரு விவாதத்தையும் உருவாக்கியிருந்தது. ஹலால் லவ் ஸ்டோரி கேரளத்தின் மலபார் பகுதியில் இரண்டாயிரங்களின் தொடக்க காலகட்டத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. இது கேரளத்தில் செயல்படும் ஓர் இஸ்லாமிய அமைப்பின் தொண்டர்களில் சிலர் ஒரு திரைப்படம் எடுக்க முயற்சிசெய்வது குறித்த திரைப்படமாகும். எனவே இது திரைப்படத்துக்குள் திரைப்படம் என்ற பாணியைக் கையாள்கிறது.

மேலும் படிக்க
bulldozer politics tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் அழகியலும் இந்து தேசியக் களியாட்டமும்

Loading

முஸ்லிம்களைத் தாக்குவதைக் கண்காட்சியாக்குவதன் மூலம் ஒரு பெருங்கொண்ட மக்கள்திரள் சத்தும் சாரமுமற்ற வாழ்வில் ஒரு உந்துசக்தியைப் பெறுவதாக உணர்கிறார்கள். அகத்திலும் புறத்திலும் இருக்கும் வாழ்க்கை பாரத்தைத் தாங்க முடியாத மக்களுக்கு அவர்களது வலியை குணப்படுத்துவதற்குப் பதிலாக வலியை மறத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகளைக் கொடுத்து பிறழ்ச்சியான இன்பத்திளைப்பில் திளைக்கச் செய்வதற்கு எவ்வகையிலும் மாறுபட்டதல்ல இந்து தேசியவாத அரசியல். போதை கிடைத்துக்கொண்டே இருக்க, முஸ்லிம்கள் வதைபட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு முஸ்லிம் வதை என்பது வெகுமக்கள் திரளின் களியாட்டத்துக்கான தியேட்டராகவும், முஸ்லிம்களின் கண்ணீரும் அங்கலாய்ப்பும் ஃபாசிஸ்ட் போர்னோகிராஃபியாகவும் மாறிவிட்டது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம்களை மற்றமையாக்கும் லிபரல் சொல்லாடல்கள்

Loading

ஆக, பொதுவாக முஸ்லிம் empowerment-யும், குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆற்றல்படுத்தலையும் ஊக்குவிக்கும் காரணியாக முஸ்லிம் சமூகத்தின் சமய-சமூகக் கட்டமைப்புகள் செயல்பட முடியும். பொதுவாக முஸ்லிம் சமூகத்தையும், குறிப்பாக முஸ்லிம் பெண்களையும், பலவீனப்படுத்தும் வெளிகளாக ‘பொது’வெளிகளும் செயல்பட முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் புரிதல்கள் எதுவும் இல்லாமல் முஸ்லிம் backwardness-ஐ ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் அகவயச் சிக்கல்களாக நிரல்படுத்துவது ஒரு முஸ்லிம் விரோதச் செயல்பாடு இல்லையா? முஸ்லிம் மற்றமையாக்கத்தின் ஆற்றல் வரட்டுத்தனமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்குள் இல்லை. மாறாக, முஸ்லிம் மற்றமையாக்கத்தின் உயிர், நவீனமாகவும் மதச்சார்பற்றதாகவும் தெரியும் லிபரல் சொல்லாடல்களுக்குள்தான் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்

Loading

இத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பது இத்தொகுப்பின் மிக முக்கியமான பலமாகும். இந்துத்துவத்தை கருத்தளவில் எதிர்கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகைகளில் அதைச் செய்வார்கள். ஒன்று அதன் பிரச்சாரங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்க பதில்களைச் சொல்வது, இரண்டாவது அதன் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விவாத மேசையை திருப்ப எத்தனிப்பது. மார்க்ஸ் இவ்விரண்டையுமே செய்திருக்கிறார் என்பதை இந்நூலை கூர்ந்து வாசிப்போர் புரிந்துகொள்வர்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்

Loading

குஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது. 

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

திராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்

Loading

இந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை

Loading

இப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது?

Loading

தமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

திராவிட அரசியலும் முஸ்லிம்களும்

Loading

விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது?

மேலும் படிக்க