காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (2)
சிப்பாய்ப் புரட்சியின் நாயகர்கள் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு இந்திய விடுதலை வரலாற்றில் முதன்மையான இடமுண்டு. அதில் பங்குகொண்டு போராடியவர்களில் மிக முக்கியமானவர் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி. 1797ல் பிறந்த இவர், அறபி, உருது, பார்ஸி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்ற பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். சமஸ்தான மன்னர்கள் இவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். சில சமஸ்தானங்களில் நீதிபதியாகவும் பணி புரிந்தார். இந்திய மன்னர்களுக்கு இடையே விரோதத்தை விதைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் பெரும் வெற்றி பெற்று இறுமாப்புடன் இருந்த ஆங்கிலேய அரசு, இந்திய செல்வத்தை தொடர்ச்சியாகக் கொள்ளையடித்து வந்தது. அதுகுறித்து சமஸ்தான மன்னர்களுக்குப் புரிய வைத்துடன், முகலாய மன்னர் பஹதூர்ஷா ஜாஃபர் தலைமையில் 1857 சுதந்திரப் போராட்டம் நடைபெற வித்திட்டவர் அல்லாமா பஜ்லேஹக்…
மேலும் படிக்க